#Sivaganga | குங்கும டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாப பலி… சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

சிவகங்கை அருகே கும்கும டப்பாமை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றிவருகிறார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின்…

#Sivaganga | A one-year-old child who swallowed a saffron can is a tragic victim... Birthday celebrations ended in tragedy!

சிவகங்கை அருகே கும்கும டப்பாமை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றி
வருகிறார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள அவரின் இல்லத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இந்த நிலையில் சூரிய பிரகாஷின் மனைவி அவரது ஒரு வயது மகனான தரன்தேவாவுக்கு பவுடர் அடித்து பொட்டு வைத்துள்ளார்.

பின்னர் அவர் ஏதோ பொருள் எடுப்பதற்காக அடுப்பங்கரைக்கு சென்ற நிலையில் குழந்தை அருகில் இருந்த குங்கும டப்பாவை விழுங்கியது. குழந்தை மூச்சு விட சிரமப்பட்ட நிலையில், குழந்தை குங்கும டப்பாவை விழுங்கியதை அறிந்த தாய் அதனை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் குழந்தை மயங்கியதுடன் வாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடற்கூராய்விற்காக குழந்தையின் உடல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.