பீகாரை தொடர்ந்து சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது.
இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வந்தனர். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
டிசம்பர் 4 ஆம் தேதி இப்பணிகள் நிறைவடைய இருந்த நிலையில் பல்வேரு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 2 முறை நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி விண்ணப்பங்கள் பெறுவதற்கான பணிகள் நிறைவடந்தன. இதையடுத்து தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 9-ம் தேதி (இன்று) வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்பவர்கள் ஜனவரி 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ் நாட்டில் மாவட்டம் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.







