முக்கியச் செய்திகள் தமிழகம்

10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அடுத்த 10 நாட் களில் 5 கோடியை எட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற, முதலமைச் சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் 108 ஆம்பிலன்ஸ் மேலாண்மை சேவை ஆண்டு விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே மாதம் 7ம் தேதியில் இருந்து, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 34 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை இன்னும் 10 நாட் களில் 5 கோடியை எட்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 22 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளதாகவும், நாளை நடைபெறும் முகாமை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச் சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளா கனமழை; இதுதான் காரணம்

Halley Karthik

3 வது டெஸ்ட்: 432 ரன்கள் குவித்து இங்கிலாந்து ஆல் அவுட், 354 ரன்கள் முன்னிலை

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் பதில்

EZHILARASAN D