வெளியானது சிம்புவின் ‘பத்து தல’; ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சென்னை ரோகிணி திரையரங்கில் சிம்புவின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற…

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் திரையரங்குகளில்
வெளியானது. சென்னை ரோகிணி திரையரங்கில் சிம்புவின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான் பத்து தல. இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டராகவும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார். இந்த படத்தினை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் இன்று வெளியானது. காலை 8 மணி முதல் காட்சியை காண சென்னை கோயம்பேடு ரோஹிணி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து சிம்பு ரசிகர்கள் ரோகிணி திரையரங்கில் டிஜே இசையுடன், நடனமாடி தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து சிம்புவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பத்துதல திரைப்படத்தைக் காண திரையரங்கிற்கு ஹெலிகாப்டர் மூலமாகத் தான் வருவேன் என தெரிவித்திருந்த நகைச்சுவை நடிகரும் சிம்புவின் தீவிர ரசிகரான கூல்
சுரேஷ் பொம்மை ஹெலிகாப்டரை எடுத்து வந்து ரசிகர்களை உற்சாக படுத்தினார்.

மேலும் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளதாகவும் ரஜினியின்
படம் போல் சிம்புவின் பத்து தல இருக்கும் என முதல் காட்சியை காண வந்த
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்தார்.

மொத்தமாக 2 மணி 15 நிமிடம் நீளம் கொண்ட பத்து தல திரைப்படம் CBFC இன் U/A
சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன், கெளதம் கார்த்திக்,பிரியா
பவானி சங்கர், கலையரசன், ஜோ மல்லூரி, கெளதம் வாசுதேவ் மேனன், டீஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளதால் படத்தில் எதிர்பார்ப்பு திரையுலக ரசிகர்கள் மத்தியில்
அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.