சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’-யின் ரீம்மேக் தான் ’பத்து தல’. இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தினை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள் : ”மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்கு மிக முக்கியமானது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ’பத்து தல’ படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிம்புவின் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். படத்தை பார்த்தவர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே வரப்பெற்றன.
https://twitter.com/StudioGreen2/status/1651304677097734144?t=ktvaFI7mXiLVPpWPdr159w&s=08
முதல் நாளிலேயே, ரூ.12.3 கோடி வசூலை இப்படம் ஈட்டியது. சிம்புவின் திரைப் பயணத்தில், இது சிறந்த ஓபனிங்காகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் ”பத்து தல” படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.







