மதுரை சித்திரை திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்ச்சியாக தங்க பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 23ம் தொடங்கிய சித்திரை திருவிழா மே 5ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் 4ம் நாள் நிகழ்வாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் இருந்து தங்க பல்லக்கில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சின்ன கடை வீதி, தெற்கு வாசல் வழியாக நடைபெற்ற வீதியுலா, இறுதியாக கோயிலை சென்றடைந்தது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.







