முக்கியச் செய்திகள் சினிமா

நிறைவடைந்தது மாநாடு படப்பிடிப்பு; படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2019ல் தொடங்கிய மநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

சிம்பு நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஏற்கெனவே முடிவடைந்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மீதமிருந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து மீதமிருந்த காட்சிகளையும் படமாக்கி முடித்துள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவையென இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் ஓசூரில் உள்ள சிறிய விமான தளத்தில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ரம்ஜானில் வெளிவர இருந்த இப்படத்தின் பாடல், ஜூன் 21ல் வெளியானது. இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் மத்தியில் பட ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், ஆயுத பூஜைக்கு மாநாடு வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிம்புவுடன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பல போராட்டங்களைக் கடந்து மாநடு தனது பந்தை விரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனாவால் பாதிப்பு!

Halley karthi

Exclusive: தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை : அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை!

Halley karthi

இன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!

Jayapriya