12,500 கிராமங்களுக்கு இணைய சேவை திட்டம் – அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் 12,500 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தங்கு தடையின்றி இணைய சேவை கிடைக்க கண்ணாடி இழை (fiber net) மூலம் சேவையை விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மனோ…

தமிழகத்தில் 12,500 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தங்கு தடையின்றி இணைய சேவை கிடைக்க கண்ணாடி இழை (fiber net) மூலம் சேவையை விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு முழுவதும் கிராமங்களுக்கு தங்குதடை இன்றி இணைய சேவை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த இணைய சேவையானத் கண்ணாடி இழை எனப்படும் fiber net மூலம் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார். ஆனால் இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஒரு வருடம் வரை ஆகும் என்பதால், மாற்று ஏற்பாடாக மற்ற இணைய சேவை அமைப்புகளை ஒருங்கிணைத்து கிராமப்பகுதிகளுக்கு இணைய சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முட்டாள்தனமானது என தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், அதிமுக தொடங்கிய திட்டங்களை அவர்களே குப்பையில் போட்டுவிட்டதாக தெரிவித்தார். பல திட்டங்கள் தரமற்ற முறையில் உள்ளது, பல திட்டங்கள் பாதியில் நிற்பதாக தெரிவித்த அமைச்சர், இந்த திட்டங்களை சர் செய்வதே பெரும் சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தற்போதுள்ள திமுக ஆட்சியில், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படும் எனவும், மேக தாது அணை விவகாரத்தில் தெளிவான முடிவை அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். கிராமங்களுக்காக இணைய சேவை திட்டத்தின் மூலம் சுமார் 12,500 கிராமங்கள் பயன்பெறும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.