முக்கியச் செய்திகள்இந்தியா

சிக்கிம் | ஜூன் 9ல் முதலமைச்சராக பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்!

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது .  INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதி நடைபெற்றது.  அதில் அருணாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்தது.  சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில், 31 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 1 இடத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வெற்றி பெற்றது.  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இதன்மூலம் 31 இடங்களை கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்தது.  இந்த நிலையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங், ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் கூறியதாவது,

“புதிய அமைச்சர்கள் குழுவின் பதவியேற்பு விழா,  5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போலவே,  ஜூன் 9ம் தேதி பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும்.  இந்த நிகழ்ச்சியில் சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் இருந்து,  ஏராளமான எஸ்கேஎம் கட்சியினர்  கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  கட்சியின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி.  எஸ்கேஎம் தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, கட்சிக்கு மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸில் புதிய பொறுப்பு

Web Editor

தென்காசியில் துணிவு பட சிறப்பு காட்சிகள் ரத்து; ரசிகர்கள் கூச்சலிட்டதால் காவல்துறை விரட்டியடிப்பு

Web Editor

திருடிய வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன்! காலையில் தட்டி எழுப்பிய போலீஸ்!!

Jayasheeba

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading