சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2- ஆம் கட்ட பணிகளுக்கான வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பீட்டில் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் – 2, வழித்தடம் 4-ல் (பவர்ஹவுஸ் ஸ்டேஷன் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை) 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அதற்கு இடையில் உள்ள வழித்தடங்கள் மற்றும் பூந்தமல்லி பணிமனை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு மற்றும் காற்றோட்டம் சீரமைப்பு பணிகளை வழங்குதல், நிறுவுதல், சோதனை செய்தல் போன்ற அனைத்து பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் வோல்டாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தமானது.
இந்தப் ஒப்பந்தம் பூந்தமல்லி பணிமனை மற்றும் வழித்தடம் 4-ல் உள்ள 18 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களுக்கான மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம் வோல்டாஸ் நிறுவனத்திற்கு ரூ. 134.9 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் வோல்டாஸ் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி தலைவர் ஜெயந்த் தேஷ்பாண்டே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் எஸ் ராமசுப்பு (இயக்கம் மற்றும் தொடர் வண்டி), இணை பொது மேலாளர் கே. ரவிகுமார் (மின்சாரம் மற்றும் பராமரிப்பு), மேலாளர் எச். அப்பாஸ், வோல்டாஸ் நிறுவனத்தின் மண்டல தலைவர் பிப்லாப் சட்டோபாத்யாய், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் வோல்டாஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









