முக்கியச் செய்திகள் தமிழகம்

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 30ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்படி, சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷாவா இட மாற்றம் செய்யப்பட்டு, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நேற்றை விட சற்று உயர்ந்த கொரோனா தொற்று எண்ணிக்கை

G SaravanaKumar

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’அதிகாரம்’

Gayathri Venkatesan

குஜராத் தேர்தல்; மேலும் 3 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

G SaravanaKumar