மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்தர் தின விழா!

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பிலும், ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில் சித்தர் தின விழா மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசு…

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பிலும், ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில் சித்தர் தின விழா மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில் சித்தர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ. பாலாஜி விழாவை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவ மூலப்பொருட்கள் கண்காட்சி, சித்த மருத்துவர் அறுவை சிகிச்சை கருவிகள் கண்காட்சி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்களுக்கான பாரம்பரிய சமையல் போட்டி நெகிழி இல்லா கடற்கரை திட்டக்குழு கண்காட்சி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியினை கண்டு பயன் பெற்றனர்.

–அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.