முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஷூப்மன் கில், புஜாரா அபார சதம்.. வங்கதேச அணிக்கு 513 ரன்கள் இலக்கு

இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா டிக்ளேர் செய்து, வங்கதேச அணிக்கு 513 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ரிஷப் பந்த் சற்று அதிரடி காட்டி 46 ரன்களில் அவுட்டானார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது புஜாரா – ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 90 ரன்னிலும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். குல்பித் யாதவ் 40 ரன்கள் என மாஸ்கட்ட இறுதியாக இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 100 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை மளமளவென இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி 8 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வங்கதேச அணி பாலோ ஆன் ஆன நிலையிலும் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் விளையாடியது. கே.எல்.ராகுல், சுப்மன் கில்தொடக்க வீரர்களாக ஆடினார். இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். ராகுல் 23 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து புஜாரா, கில் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தனர்.

கில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதுடெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதனை தொடர்ந்து 110 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய புஜாரா சதமடித்து அசத்தினார். 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தபோது இந்தியா 2வது இன்னிங்க்சை டிக்ளேர் செய்தது. வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தரமான சம்பவத்தை நிகழ்த்தி விட்டு விடைபெற காத்திருக்கும் தென் மேற்கு பருவமழை..!

G SaravanaKumar

ஓ.பி.எஸ் நான்கு தளபதிகளின் கதை

Web Editor

தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

G SaravanaKumar