செங்கல்பட்டில் A+ ரவுடி மீது துப்பாக்கி சூடு!

செங்கல்பட்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற A+ ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் காவல்நிலைய சரித்திர பதிவேடு கொண்ட A+ ரவுடியான தணிகா…

செங்கல்பட்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற A+ ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் காவல்நிலைய சரித்திர பதிவேடு கொண்ட A+ ரவுடியான தணிகா என்ற தணிகாசலம் மீது செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக செங்கல்பட்டிற்க்கு அழைத்து வந்தனர்.

அப்போது மாமண்டூர் அருகே போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது ரவுடி தணிகாவை போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் கை மற்றும் கால் ஆகிய பகுதியில் சுட்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு A+ ரவுடி தணிகாச்சலத்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதையும் படியுங்கள் : பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்..

தணிகாசலத்தின் மீது 6 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சிகள் மற்றும் பல்வேறு வழிப்பறி வழக்குள் உள்ளன. இவர் கடந்த 2016-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். தணிகாசலத்தின் மீது பெரியபாளையம்,  கே.கே.நகர், ரெட் ஹில்ஸ், செங்குன்றம், சென்னை, புழல் ஆகிய பல்வேறு காவல் நிலையங்களில் ஆள்கடத்தில், கொலைமிரட்டல், வழிப்பறி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புழல் சிறையில் சில மாதங்களுக்கு முன்பு தணிகாச்சலத்திடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.