அதிர்ச்சி! தமிழ்நாட்டில் மேலும் ஒரு விசாரணை கைதி மரணம்

நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நாகூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாக விசாரணை கைதி மரணம் என்பது நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும்…

நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நாகூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அண்மைக்காலமாக விசாரணை கைதி மரணம் என்பது நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், பேசு பொருளாகவும் மாறியது. அந்த சுவடு அழிவதற்கு முன்பு நேற்று சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், மேலும், ஒருவர் உடல் நிலை பாதித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் அதே பகுதியில் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட சிவசுப்பிரமணியனை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

https://twitter.com/news7tamil/status/1536291308431876096

அண்மைச் செய்தி: ‘“வேற்றுமையில், ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்பதை உணர்த்தும் விதமாக, ஆளுநரின் பேச்சு உள்ளது” – த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்’

இதனையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசுப்பிரமணியனுக்கு கடந்த 10-ஆம்  திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைக்காக சிவசுப்பிரமணியனை காவலர்கள் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிவசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட சிறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாகவும், காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1536304837603627008

மேலும், தமிழ்நாட்டில் அரசு இயங்குகிறதா? எனவும், இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன் எனக் குறிப்பிட்டுள்ள அவர், காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது, முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.