நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழாவில், நடைபெற்ற மெகா திருவிளக்கு பூஜையில், 3000 பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் கிராமத்தில்
வண்டி மலையான் மற்றும் வண்டி மலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. இதனையொட்டி கோயிலில் சிறப்பு குடமுழுக்கு பூஜை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இரவில் 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மெகா திருவிளக்கு பூஜை
நடத்தப்பட்டது . அப்போது கோயிலில் நடந்த சிறப்பு தீபாராதனைக்கு பின்பு கோயில்
பூசாரி விளக்கேற்றி வைத்து திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் கோயிலில் வந்து அம்மனை வழிபட்டு கோயில் வளாகத்தை சுற்றி உள்ள தெருக்களில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த திரு விளக்கிற்கு பொட்டு வைத்து பூ மாலையிட்டு தீபம் ஏற்றி பூஜை செய்து திருவிளக்கு வழிபாட்டு பாடல்கள் பாடப்பட்டன . அதன் பின் தங்களது எண்ணம் ஈடேற பெண்கள் அம்மனை வேண்டி வழிபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு விழா கமிட்டி சார்பில் புடவை மற்றும் சில்வர் தட்டு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் இரவு அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வண்டி
மலைச்சி அம்மனை வழிபட்டனர்.
ரூபி.காமராஜ்