முக்கியச் செய்திகள் சினிமா

ஷங்கர் வேற லெவல் இயக்குநர்.. புகழும் பாலிவுட் நடிகை

இயக்குநர் ஷங்கர் நம்ப முடியாத வகையில் படங்களை உருவாக்குபவர். அவர் வேற லெவல் இயக்குநர் என்று பிரபல பாலிவுட் நடிகை கியரா அத்வானி தெரிவித்தார்.

இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் தொடக்க விழா கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். ஜெயராம், அஞ்சலி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் 22 ஆம் தேதி தொடங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது குறித்து நடிகை கியரா அத்வானி கூறியதாவது:

நீண்ட நாட்களாக நான் பணியாற்ற விரும்பிய இயக்குநர், ஷங்கர். அவர் படத்தில் நடிக்க ஆசை இருந்தது. இந்தப் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் நம்ப முடியாத வகையில் படங்களை உருவாக்குபவர். அவர் வேற லெவல் இயக்குநர். அவர் பார்வையும் நிச்சயமாக வேறு ஒன்றுதான். அவர் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் பொலிடிக்கல் டிராமா கதையை கொண்டது. ஆனால், காதல் மற்றும் பாடல்களுக்கு போதுமான இடம் இருக்கிறது.

அவர் படத்தில் பாடல்கள் எப்போதும் பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் இருக்கும் என்பதால் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். நான் நடித்த படங்களில், 10, 15 நாள் வெவ்வேறு செட்களில் பாடல் காட்சி படமாக்கப்பட்டதே இல்லை. அதனால் ஷங்கர் இயக்கும் படத்தில், அப்படி ஒரு பாடலுடன் நடிப்பை தொடங்க இருக்கிறேன். இவ்வாறு கியரா அத்வானி தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

Jeba Arul Robinson

இந்தியாவில் புதிதாக 22, 842 பேருக்கு கொரோனா

Halley karthi

காதல் கணவருடன் சென்ற மகள் – அழுது புரண்ட பெற்றோர்

Halley karthi