வரலாறு காணாத புதிய உச்சத்தை சென்செக்ஸ் இன்று தொட்டது. ஆனாலும் வர்த்தக நேர முடிவில் 49 புள்ளிகள் குறைந்து, 61 ஆயிரத்து 716 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று எழுச்சியுடன் வர்த்தகம் நடைபெற்று வந்தது. மும்பை பங்குச்சந்தை 62 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. மேலும் வர்த்தக நேரத்தின் இடையே 62 ஆயிரத்து 245 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 18,604 புள்ளிகளில் வர்த்தகமானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த இரண்டு வாரமாக காளையின் ஆதிக்கத்தில் இருந்த பங்குச்சந்தைகள் , இன்று பிற்பகலுக்கு பிறகு சிறிதளவு சரிவைச் சந்தித்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை சென்செக்ஸ் 61 ஆயிரத்து 716 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிப்டி , 58 புள்ளிகள் குறைந்து ,18 ஆயிரத்து, 418 புள்ளிகளாகவும் காணப்பட்டது.