முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

ஷங்கர் பட ஹீரோயின் இவர்தான்: உறுதிப்படுத்தியது படக்குழு

ஷங்கர் இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதை படக்குழு உறுதிப் படுத்தி உள்ளது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் உட்பட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார் இயக்குநர் ஷங்கர். பட்ஜெட் அதிகமானதால், லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஷூட்டிங் தாமதமானது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஷ் வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இதற்கிடையே, ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இதற்கிடையே, ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தின் வேலைகளை இயக்குநர் ஷங்கர் தொடங்கிவிட்டார். இந்தப் படத்தில் ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், இந்தியில் எம்.எஸ்.தோனி, மெஷின், கபீர் சிங், குட் நியூஸ், லக்‌ஷ்மி உட்பட பல படங் களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியாகி வந்த நிலையில், படக்குழு இப்போது அதை உறுதிப்படுத் தியுள்ளது. கியாரா அத்வானியின் பிறந்த நாளான இன்று, தயாரிப்பு நிறுவனமான வெங்க டேஸ்வரா கிரியேஷன்ஸ் இதை அறிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் கியாரா பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்துடன் இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார்.

இதற்கிடையே ஷங்கர் இயக்கும் மூன்று படங்களில் நடிக்க கியாரா ஒப்பந்தம் ஆகியிருப் பதாகவும் ஷங்கர் அடுத்து இந்தியில் இயக்கும் ’அந்நியன்’ இந்தி ரீமேக்கிலும் கியாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்

Ezhilarasan

அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றார் ஜோ பைடன்

Jeba Arul Robinson

பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி: சென்னையில் பால்ராசு கைது

Arivazhagan CM