ஷங்கருடன் 3 படங்களுக்கு ஒப்பந்தமான பிரபல ஹீரோயின்!

இயக்குநர் ஷங்கர் அடுத்து இயக்கும் மூன்று படங்களில் நாயகியாக, பிரபல பாலிவுட் ஹீரோயின் ஒப்பந்தமாகியுள்ளார். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார் இயக்குநர் ஷங்கர். பட்ஜெட்…

இயக்குநர் ஷங்கர் அடுத்து இயக்கும் மூன்று படங்களில் நாயகியாக, பிரபல பாலிவுட் ஹீரோயின் ஒப்பந்தமாகியுள்ளார்.

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார் இயக்குநர் ஷங்கர். பட்ஜெட் அதிகமானதால், லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஷூட்டிங் தாமதமானது. இதனால் இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதற்கிடையே, ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க ஷங்கருக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையே, ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தின் வேலைகளை இயக்குநர் ஷங்கர் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், இந்தியில் எம்.எஸ்.தோனி, மெஷின், கபீர் சிங், குட் நியூஸ், லக்‌ஷ்மி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையே ஷங்கர் இயக்கும் மூன்று படங்களில் நடிக்க கியாரா ஒப்பந்தம் ஆகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷங்கர் அடுத்து இந்தியில் இயக்கும் ’அந்நியன்’ இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் ஜோடியாகவும் அவர் நடிக்க உள்ளார். அடுத்து ஷங்கர் என்ன படம் இயக்குகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் தயாரிக்கும் படத்தில் கூட கியாரா நடிக்கலாம் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.