நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஷீர்டி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா இப்போது ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகவும் அட்லீ இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். அதோடு ரவுடி பிக்சர்ஸ் சார்பில், ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த சில நாட்களாக கோயில்களுக்கு சென்று வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி கோயிலுக்கு சென்ற இவர்கள், இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். பின்னர், மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயில், மகாலட்சுமி கோயில், மும்பாதேவி கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று வழிபட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.