மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஷகீல் அக்தர் கடந்து வந்த பாதை…

மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஷகீல் அக்தர் கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பில் பார்ப்போம்.  தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி இத்தனை நாட்கள் காலியாக இருந்த நிலையிலும் …

மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஷகீல் அக்தர் கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பில் பார்ப்போம். 

தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி இத்தனை நாட்கள் காலியாக இருந்த நிலையிலும்  இந்த பொறுப்பிற்கு மட்டும் ஆணையர் நியமனம் நடக்காமல் இருந்தது. இந்த நிலையில் இந்த பதவிக்கு முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிப்பதற்காக ஆலோசனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

மொத்தமாக தமிழ்நாடில் தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களின் பதவிகள் காலியாக இருந்ததால் இந்த பதவிக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் கமிட்டி ஒன்றை  தமிழ்நாடு ரசு அமைத்தது.  இந்த நிலையில்தான் தற்போது முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் இந்த பதவியை பெற்றுள்ளார்.

ஷகீல் அக்தர் கடந்து வந்த பாதை:

  • பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஷகீல் அக்தர் 1962-ம் ஆண்டு பிறந்தவர்.
  • முதுநிலை இயற்பியல் படித்துள்ளார்.
  • 1989-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் தருமபுரியில் ஏஎஸ்பி-யாக பணியைத் தொடங்கினார்.
  • தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்பியாகவும், சிவகங்கை மாவட்ட எஸ்பி-யாகவும்,  குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
  • மேலும், சென்னை போக்குவரத்து வடக்கு துணை ஆணையராகவும், இந்திய உள்நாட்டு விவகார அமைச்சருக்கு தனி செயலாளராகவும் ஷகீல் அக்தர் பணிபுரிந்துள்ளார்.
  • அத்துடன், காவல்துறை நிர்வாக பிரிவு IG, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர், தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் DGP, சிறப்பு காவல்படை கூடுதல் DGP  என பல பொறுப்புகளை வகித்து அனுபவம் பெற்றுள்ளார்.
  • இவர் 2002- ம் ஆண்டு மதுரை துணை ஆணையராக இருந்த போது கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கில் வழக்கில் தொடர்புடைய இமாம் அலி உள்பட 5 தீவிரவாதிகள் பெங்களூருவில் தலைமறைவாக இருந்ததை அறிந்த ஷகில் அக்தர் மற்றும் இவர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் காய்கறி வியாபாரிகள் போல மாறுவேடத்தில் செயல்பட்டு, தீவிரவாதிகள் 5 பேரையும் என்கவுன்டர் செய்தனர்.
  • இந்து அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்,  இந்த என்கவுண்டருக்குப் பிறகு தீவிரவாதிகள் மிரட்டலால் ஷகில் அக்தருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
  • இவரின் சிறப்பான பணிக்காக 3 முறை ஜனாதிபதி விருதைப்பெற்றார். இதனை தொடந்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கிய வழக்கான கோடநாடு வழக்கு, அதிமுக அலுவலக கலவர வழக்கு, ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தார்.
  • இந்நிலையில் தான், தமிழ்நாட்டின் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவியை  ஷகில் அக்தர் பெற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.