புதுக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணிக்கம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமினில் வந்த அஜித் குமார் கடந்த 2021ஆம் ஆண்டு மீண்டும் 10 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றார்.
இதுதொடர்பாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மகிளா கோர்ட்டில் நடைபெற்று
வந்தது. ஏற்கனவே சிறுமிக்குப் பாலியல் தொல்லையளித்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவதாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் அஜித்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 25,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








