முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் -முத்தரசன்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருப்பூரில் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம் எப்படி எழுதப்பட்டதோ அதே போன்று பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கம் முன்வைக்கப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், 8 ஆண்டுகளில் மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. விவசாயிகளுக்கு விரோதமாக சட்டங்களைக் கொண்டு வந்து தொடர் போராட்டத்திற்கு பிறகு அந்த சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை எடுத்து விடுவதாக கூறினார்கள் ஆனால் அதைச் செயல்படுத்தவில்லை. மாறாக பெரிய பெரிய நிறுவனங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொண்டது என்றார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் குடியரசுத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்த முடியும் இது 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை கொண்டு வந்து நாடே அக்கினியாக மாறிவிட்டது. அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இத்திட்டத்தை கைவிட வேண்டும் நல்ல திட்டம் இல்லை என்பது பாஜகவை தவிர அனைத்து கட்சிகளை நிலைப்பாடாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை யாரும் தூண்டவில்லை. தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். அக்னிபாத் அத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ராணுவத்திற்கு ஏற்கனவே எப்படி வீரர்கள் தேர்வு நடைபெற்றதோ, அதேபோன்றே நடைபெற வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை” -ஜெயக்குமார்

Halley Karthik

”விதிகளின்படியே கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது”

Janani

குருமூர்த்தியின் பேச்சு, நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் பேச்சு- திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம்!

Jayapriya