முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை-காவல் ஆய்வாளர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

சென்னை வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த
வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு
நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி ராஜலட்சுமி
தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட
வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் ஷகிதா பானு,
உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி
செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன்,
பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி என்கிற வெங்கட்ராமன்,
ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26
பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த
வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 22 பேரை கடந்த 2020- ம் ஆண்டு நவம்பர் 21-ம்
தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேர்களில், இரு பெண்கள் உள்பட
4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர்
விசாரணை காலக் கட்டத்தின்போது இறந்து விட்டார். மீதமுள்ள 21 நபர்கள் மீதான
குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர்
புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி,
வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது
அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ்,
வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண் ஆகிய 21 நபர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த
நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விவரத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி கூறுவதாக
நீதிபதி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5,570 போராட்ட வழக்குகள் ரத்து; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

G SaravanaKumar

’சகோதரனா நினைச்சேன், இப்படி பண்ணிட்டான்..’ நடிகை பரபரப்பு புகார்

Halley Karthik

தமிழ்நாட்டுக்கு 1 கோடி தடுப்பூசி: மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

Halley Karthik