முக்கியச் செய்திகள் குற்றம் செய்திகள்

கோவை அருகே இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் கை மீட்பு

கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட 45 வயது மத்திக்கத்தக்க ஆணின் இடது கை மீட்கப்பட்டுள்ளது.

கோவை துடியலூரை அடுத்துள்ள வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல். நகர் பகுதியில் இன்று காலை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்துள்னர். அப்போது, பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தூய்மை பணியாளர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்டகாவல் கண்காளிப்பாளர் உள்பட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்தபோது அது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை எனத் தெரியவந்துள்ளது.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். உடலின் மற்ற பாகங்கள் அருகில் ஏதேனும் வீசப்பட்டுள்ளனவா என அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளைத் தேடி வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் : திமுக மாணவர் அணி தேசிய மாநாடு

Arivazhagan Chinnasamy

வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் மடிக்கணினியுடன் மூவருக்கு அனுமதி : வேல்முருகன் குற்றச்சாட்டு!

EZHILARASAN D

இட ஒதுக்கீடு: தமிழக அரசின் அழைப்பை ஏற்ற பாமக!

Nandhakumar