கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால், கொரோனா பரவலின் மூன்றாம் அலை உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதே நிதர்சனமான உண்மை என தெரிவித்த ஓ.பன்னீர்செல்வன், தியாகராய நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.







