கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் மோதல்

கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரும், வார்டு உறுப்பினர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டு மோதினர். கோவை மாவட்டம் சிக்கதாசம்பாளையத்தில், ஊராட்சி மற்ற தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஊராட்சி…

கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரும், வார்டு உறுப்பினர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டு மோதினர்.

கோவை மாவட்டம் சிக்கதாசம்பாளையத்தில், ஊராட்சி மற்ற தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதிலும், வார்டு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஊராட்சி துணை தலைவர் மற்றும் பெண் வார்டு உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் சேலைகளை இழுத்து, கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.