முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றது.

சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற விமானங்கள் ஒரு மணி வரையிலும், உள்நாட்டு விமானங்கள் 30 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் குறித்த நேரத்திற்கு வந்தடைந்ததாக கூறியுள்ளனர்.
பலத்த மழை காரணமாக பயணிகளின் உடமைகள், உணவு பொருட்களை ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்து சென்ற விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 சா்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, துபாய், கத்தார், ஓமன், குவைத், இலங்கை, லண்டன், டாக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் 13 சா்வதேச விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்தது ஒரு மணி நேரம் வரையிலும், அதைப்போல் உள்நாட்டு விமானங்களான கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூா், கொச்சி, கோழிக்கோடு, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, அந்தமான், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 46 உள்நாட்டு விமானங்கள் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரையிலும் தாமதமாகவும் புறப்பட்டு சென்றது.

ஆனால் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் வெளிrainநாடுகள், வெளியூா்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து தரையிறங்குகின்றது.

மேலும் சென்னை மாநகா், வட சென்னை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மீனம்பாக்கம் பகுதிகளில் மழையின் அளவு குறைவு. எனவே, சென்னை விமானநிலைய ஓடுபாதைகளில் மழைநீா் தேங்கி நிற்கவில்லை. இதனால், விமான சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

Advertisement:
SHARE

Related posts

தொடர்ந்து வாய்தா.. ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Gayathri Venkatesan

அதிகரிக்கும் கொரோனா; ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை

Saravana Kumar

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி!

Jeba Arul Robinson