முக்கியச் செய்திகள் தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில் 1500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செய்களத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதால் 1500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது.

மானாமதுரை அருகே செய்களத்தூர் பகுதியை ஒட்டிய பெரிய கண்மாய், சின்ன கண்மாய் நெடுங்குளம், சந்திரநேந்தல், புளிச்சிகுளம், குருந்தன்குளம் ஆகிய கண்மாய்கள் கடந்த காலங்களில் சரியாக தூர்வாரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழையின் காரணமாக தற்போது ஐந்து கிராம கண்மாய்கள் நிரம்பியுள்ளது. இதனால், சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளது.

மேலும், மானாமதுரையில் இருந்து செய்களத்தூர், கள்ளர்வலசை செல்லும் ரோட்டில் உள்ள பாலங்கள் சீரமைக்கப்படும் நிலையில், தனியாக போடப்பட்டிருந்த மாற்று பாதைகளும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!

Ezhilarasan

களக்காடு தீ விபத்தால் வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை: புலிகள் காப்பக துணை இயக்குநர்

Vandhana

பண மோசடி வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் கைது!

Gayathri Venkatesan