தமிழகத்தில் தொடர் குற்ற சம்பவங்கள் – சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை!

தமிழ்நாட்டில் நிலவிய தொடர் குற்றசம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த தொடர் குற்றச் சம்பவங்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிகாரிகள் பங்கேற்பு தலைமைச் செயலாளர் டிஜிபி மற்றும் மூத்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்துதல் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கடந்த நாட்களில் நடந்த சில கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த நிலவரம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அரசியல் அழுத்தங்களுக்கு இடமளிக்காமல் அதிகாரிகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.