இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஆக்லாந்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் உள்ள செட்டன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனிடையே, மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை நின்ற பிறகு பிற்பகல் 12:32 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும், 50 ஓவர்கள் கொண்ட போட்டி 20 ஓவர்களாகக் குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்கப் போராடும் என்பதால், இப்போட்டியில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.




