கோபி செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி…!

கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். அதேபோல் திமுக 64 தொகுதிகளிலும், அதிமுக 61 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த  சூழலில் தற்போது வெற்றி தோல்விகள் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

அதன் படி கோபிசெட்டிப்பாளையும் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 23 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் 81628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லசிவம் 64933 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரபு 55660 வாக்குகளும், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 8010 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.