தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். அதேபோல் திமுக 64 தொகுதிகளிலும், அதிமுக 61 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த சூழலில் தற்போது வெற்றி தோல்விகள் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 72988 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82180 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது தோல்வி இதுவாகும்.1991 ஆம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.







