கீழடி, சிவகளையை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவிக்க வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

கீழடி மற்றும் சிவகளை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து, திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார் இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…

கீழடி மற்றும் சிவகளை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து, திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்

இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை, நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்துள்ளது.

அதைப் போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகளை பகுதியை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும். அகழாய்வு குழிகள் காலத்தின் கண்ணாடி போன்றது. அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்று துறைக்குச் செய்யும் நேர்மையான பங்களிப் பாகும்.

அந்த வகையில் கீழடி மற்றும் சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க, வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.