பள்ளியின் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை!

மதுரையில் மாநகராட்சி பள்ளியின் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் மூலமாக கேரளா…

மதுரையில் மாநகராட்சி பள்ளியின் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்துக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் மூலமாக கேரளா லாட்டரிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் கோரிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோரிப்பாளையம், பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே ஆன்லைன் மூலமாக கேரள லாட்டரிகளை விற்பனை செய்து வந்த மதுரை கூடல்புதுாரை சேர்ந்த சேகர், அருண்குமார் மற்றும் மதுரை தல்லாகுளம் பகுதியயை சேர்ந்த பிச்சை மணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். 31 ஆயிரம் ரூபாய் ரொக்கபணமும், 2 செல்போன், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் யார் மூலமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.