முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தலா 50 படுக்கைகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணாநகர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்ற கலந்தா லோசனை கூட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, அண்ணாநகர் மாநகராட்சி மண்டலம் அடங்கிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மண்டலங்களில் அடங்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் தலா 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேபோல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 50 படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். ஊரடங்கு காலங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கொரோனா விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டுமென வும் அவர் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிஞ்சா உடையணிந்து பெண் போலீஸ் மீது வாள் தாக்குதல்: இளைஞர் சுட்டுப் பிடிப்பு!

Halley Karthik

நீட் தாக்கத்தை ஆராயும் ஆணையத்தை கலைக்க வேண்டும்: எல்.முருகன்

Ezhilarasan

இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகிறார்கள் – மத்திய அரசு

Halley Karthik