தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக முப்பதாயிரத்தை தொட்டு வந்த இந்தத் தொற்று, இன்று 33 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரே நாளில் 303 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 20,905 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில், இதுவரை 13 லட்சத்து 39 ஆயிரத்து 887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் 6640 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 3124 பேருக்கும் செங்கல்பட்டில் 2013 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.