முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

தூத்துக்குடியில் சீமான் பரப்புரை!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையின் போது பேசியதாவது: ”அரசு மருத்துவமனைக்கு சென்றால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற எண்ணத்தை உருவாக்குவேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிநீர் விற்பனையை ஒட்டு மொத்தமாக நிறுத்துவோம். எல்லா வீடுகளுக்கும் குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு சேர்க்கப்படும். உலக நாடுகள் இப்படித்தான், அவர்கள் நாட்டு மக்களுக்கு தண்ணீர் கொடுக்கின்றனர். இக்காலத்தில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் எப்படி முதலாளிக்கு கிடைக்கிறது?. பூமிலிருந்து தண்ணீர் எத்தனை நாட்கள் இந்த முதலாளிகள் உரிய முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தண்ணீர் விற்கும் முதலாளியிடம் சென்று 100 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் ஏரி வெட்டி தண்ணீரை சேமிக்கும் ஒரு ஒப்பதத்தை இந்த அரசு கையெழுத்திட வைக்க முடியுமா?. கொரியாவைச் சேர்ந்த முதலாளியை சென்னையில் ஹூண்டாய் என்ற கார் கம்பேனியை நடத்துகிறார். ஒரு டன் எடையுடைய கார் தயாரிக்க 4,50,000 லிட்டர் தண்ணீர் தேவைபடுகிறது. ஆனால் ஹூண்டாய் நிறுவனம் மூன்று டன் எடையுடைய கார்களை தயாரிக்கிறது. இதனால் அதிகபடியான தண்ணீர் செலவாகிறது. ஏன் அந்த ஹூண்டாய் முதலாளி அவரது நாட்டில் இந்த கார்களை தயாரிக்கவில்லை? ஏன் என்றால் அவர் தனது நாட்டின் நீர் வளத்தை இழக்க விரும்பவில்லை. பன்னாட்டு கம்பெனிகளுக்கு நம் நாட்டின் சுத்தமான நீரை கொடுத்துவிட்டு, நம் நாட்டு மக்களுக்கு கடல் நீரை குடிநீராக ( Reverse osmosis) மாற்றித் தருகிறார்கள். மழை நீரை சேமிக்காமல் கடலில் கலக்க விட்டுவிட்டு தற்போது சுத்திகரித்து பயன்படுத்துவதால் என்ன பயன்.

முதலமைச்சர் என்பவர் அகில இந்திய புரோக்கர். பிரதமர் என்பவர் சர்வதேச புரோக்கர். ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அவர்களின் பொருட்களை அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவின் நிலை அப்படி அல்ல. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம் . எனக்கு ஓட்டு செலுத்திவிட்டு வீட்டில் படுத்து உறங்குங்கள்.எனது ஆட்சியில் பயணிக்க சரியான பாதை, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். அணு உலை, அணுமின் நிலையம் எல்லாவற்யும் தடை செய்துவிட்டு காற்றாலை மூலம் மட்டுமே மின்சாரம் எடுக்கப்படும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் வசதியை கையில் எடுக்காமல் என் நிலத்தை நஞ்சாக்கும் வேலைகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். எல்லாவற்றையும் மாற்ற, விவசாய சின்னத்தில் வாக்கு செல்லுத்துங்கள். வாக்கு கேட்க நாங்கள் கை கட்டி நிற்கிறோம் நீங்கள் எங்களை கை உயர்த்தி விடுங்கள்.” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..!

Web Editor

பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான் கான் 6 நாள் கெடு

Mohan Dass

ப்ராஜெக்ட் ப்ளூ திட்டம் விரைவில் – சென்னை துணை மேயர் தகவல்

Web Editor