ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டி!

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், நம்மாழ்வாரின் ஏழாம் ஆண்டு நினைவு…

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், நம்மாழ்வாரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு சீமான் மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் முடிவை வரவேற்பதாக கூறினார்.

அரசியல் விமர்சனம் செய்து அவரையோ அவரது குடும்பத்தையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply