குடியரசுத் தலைவர் தலைமையில் தொடங்கியது ஆளுநர்கள் மாநாடு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு தொடங்கியது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது. டெல்லியில்…

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு தொடங்கியது

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 51-வது ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு இன்று நடக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுள்ளனர். அனைத்து மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து மாநில ஆளுநர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு தொடங்கி நடந்து வருகிறது.

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு அவர் தலைமையில் நடக்கும் 4-வது ஆளுநர்கள் மாநாடு இது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் 2 நாட்கள் இம்மாநாடு நடத்தப்பட்டது. இப்போது ஒரே நாளில் இந்த மாநாடு முடிவடைகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.