முக்கியச் செய்திகள் தமிழகம்

”கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த பொங்கல் திருநாளில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

”கோவிட் தொற்று இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை இந்த அலையில் நாம் அனைவரும் உறுதி செய்திட வேண்டும். கோவிட் தொற்று நோய் பரவாமல் தடுப்பதில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். முகக் கவசம், சமூக இடைவெளி மற்றும் கைகளை கழுவுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் நெரிசலான இடங்களில் முன்னுரிமைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

கோவிட் தொற்று கண்டறிய யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்கக்கூடாது என்பதற்கான ICMR நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், இது மருத்துவ அமைப்புகளிலும் பொருந்தும். நாட்களை கடந்து இன்னும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள், இணை நோய் உள்ளவர்கள், முன் களப்பணியாளர்கள், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொல்ல தகுதியானவர்கள் உள்ளிட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை தீவிரமாக பின்தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.

அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் அதிகரித்துவரும் தொற்றைக் குறைக்க முடியும். அவ்வப்போது பெறப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியில் முழுமையாக மக்களையும் ஈடுபடுத்த வேண்டும்.”, என அவர் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், மருத்துவரின் அறிவுறுத்தலோடு மட்டுமே மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும் எனவும் கூகுள் மருத்துவர்களாக யாரும் மாற வேண்டாம் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த கடிதத்தில் வலியுறுத்திருக்கிறார்.

Advertisement:
SHARE

Related posts

சட்டமன்ற தேர்தல் ரத்து? தேர்தல் அதிகாரி விளக்கம்!

Jeba Arul Robinson

கரூர் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு!

Vandhana

தமிழ்நாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

Halley Karthik