தலைவர் சொல்வதை செய்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

அரசியல் பணியில் இலக்கு எதுவும் இல்லை என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார் திமுக…

அரசியல் பணியில் இலக்கு எதுவும் இல்லை என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “பொங்கல் புத்தாண்டு தமிழர்த்திருநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் அரசியல் பணி, திரையுலகில் இலக்கு என்று எதுவுமில்லை எனவும், தனது வேலையை பார்த்துக்கொண்டிருப்பதாகவும், தலைவர் சொல்வதை செய்துகொண்டிருக்கின்றேன் எனறும் கூறினார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன் என்று கூறிய உதயநிதி, தைப்பிறந்தால் வழி பிறக்கிம் என்பார்களே என்ற கேள்விக்கு தனக்கு ஏற்கனவே நல்ல வழிதானே இருக்கின்றது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.