முக்கியச் செய்திகள் தமிழகம்

கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

தை முதல் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நிகழ்வாக தொடங்குவதாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றுவிட்டுத்தான் தொடங்குவது வழக்கம். திமுகவைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை கொண்டாடுவது வழக்கம். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் மரியாதை செலுத்தினார்.

மேலும், திமுக பொருளாளர் டிஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர், கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் தொடர்பான அறிவுறுத்தல்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

Advertisement:
SHARE

Related posts

ஒளிப்பதிவு திருத்த மசோதா: மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Jeba Arul Robinson

குழந்தைகள் விற்பனை வழக்கு: காப்பக உரிமையாளர் 16ம் தேதி வரை நீதிமன்றம் காவல்

Vandhana

’சொன்னபடி முடி வெட்டலை’: பிரபல மாடலுக்கு ரூ.2 கோடி இழப்பீடு

Ezhilarasan