பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘#Dragon’ படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பிப் -14ம் தேதி இயக்கநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘ஓ மை கடவுளே’ காதல்…

The second poster of Pradeep Ranganathan's 'Dragon' directed by Ashwath Marimuthu is out.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு பிப் -14ம் தேதி இயக்கநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘ஓ மை கடவுளே’ காதல் நகைச்சுவை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 – வது படமாகும். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படத்திற்கு ‘டிராகன்’ என தலைப்பு வைத்தனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக முதல் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” – அமைச்சர் #KKSSRRamachandran தகவல்!

முதல் போஸ்டர் இன்று காலை வெளியானது. இதில், வொர்ஸ்ட் ஸ்டூடண்ட் என்ற தலைப்பில் காலேஜ் பேருந்து லுங்கி கட்டிக் கொண்டு புகைப்பிடிப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, இரண்டாவது போஸ்டரில் காலேஜ் லைப்பிரரி தீப்பற்றி எறிவது போன்றும் அதில் பிரதீப் ரங்கனாதன் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பது போன்று அமைந்துள்ளது. படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.