‘#Black’ | அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நெகிழ்ச்சி!

ஜீவா நடிப்பில் வெளியான ‘பிளாக்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து, சிவா மனசுல…

' #Black ' | All Scenes Housefull - Producer SR Prabhu Leschi!

ஜீவா நடிப்பில் வெளியான ‘பிளாக்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து, சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ் போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து, அதிரடி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தன.

இந்நிலையில், பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பிளாக்’. அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : #TrainAccident | 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன்!

இந்த திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களிடையே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டு வருகின்றன. 2ஆம் நாளுக்கான சென்னையிலுள்ள அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதாக எக்ஸில் புகைப்படங்கள் வெளியிட்டு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.