முக்கியச் செய்திகள் குற்றம்

சேட்டிங்கில் சீட்டிங்; தில்லாலங்கடி வாலிபர் கைது

ஆரணியில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பனின் புகைப்படத்தை வைத்து பல பெண்களிடம் சேட்டிங் செய்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட தில்லாலங்கடி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சபாஷ் கான் தெருவைச் சேர்ந்த பயாஸ்கானும் ஆரணி அடுத்த பையூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜியும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், பயாஸ் கான் தனது செல்போன் நம்பர் உடன் பேஸ்புக் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நண்பன் பாலாஜியின் புகைப்படத்தை வைத்து பல பெண்களிடம் சேட்டிங் செய்து வந்திருக்கிறார். இதில் 80க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலாஜியின் உருவம் மற்றும் பயாஸ்கானின் சேட்டிங்-கில் ஈர்க்கப்பட்ட, பல இளம் பெண்கள் காதல் வயப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைப் பயன்படுத்திய பயாஸ்கான், “தான் நன்கு படித்து நல்ல அழகாக இருப்பதால் சொந்தமாக தொழில் தொடங்கி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி பல பெண்களிடம் மெடிக்கல் ஷாப் வைப்பதாகவும் செல் போன் மொபைல் கடை வைப்பதாகவும் கூறி ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளார்.

தன்னுடைய புகைப்படம் வரும் பேஸ்புக், இன்டர்காம் கொண்ட மொபைல் எண்ணை, பார்த்து அதிர்ந்த பாலாஜி, இதனை பயன்படுத்தி வந்தது தனது நண்பன் பயாஸ்கான் என்பதை கண்டுபிடித்ததும், அதிர்ச்சி அடைந்ததோடு திருப்பூரில் இருந்து ஆரணி வந்த பையாஸ்கானை மடக்கிப் பிடித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, ஆரணி நகர போலீசார் பஸ்கானினின் மொபைலை சோதனை செய்ததில் அதில் 80க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோன்று நூதன முறையில் காதல் வலை வீசி பண மோசடியில் பயாஸ்கான் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதனால், போலீசார் தீவிர விசாரணை செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’இன்றைய போட்டியில் அஸ்வினை கண்டிப்பா களமிறக்கணும்…’ முன்னாள் பயிற்சியாளர்

Halley Karthik

கணவர் மதுவுக்கு அடிமையானதால் உயிரிழப்பு செய்த மனைவி

Jeba Arul Robinson

பிரதமர் பயணம் ரத்து; எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படவில்லை-பஞ்சாப் முதலமைச்சர்

Halley Karthik