முக்கியச் செய்திகள் தமிழகம்

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

மன்னார் வளைகுடா, லட்சத்தீவு கடல் பகுதியில் வழக்கத்தைவிட 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

இதையடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளை நங்கூரமிட்டு கடலில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் திடீரென 50 மீட்டர் தொலைவில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்து வருவதோடு நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டு படகுகள் அனைத்தும் தரை தட்டி நிற்கின்றது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 4.4 லட்சம் அபராதம் வசூல்!

Halley karthi

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

Saravana Kumar