முக்கியச் செய்திகள் இந்தியா

கேரளாவில் கடும் மழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கேரளாவில் கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடியில் அமைந்து இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. கூட்டுக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தில் அதில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பலரை காணவில்லை. கடற்படை மற்றும் ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அதை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே மழை நீடிக்கும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் திருச்சூர், இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில், மழை, வெள்ளப் பாதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருக்கிறது. மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே அங்கு விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஸ்மார்ட் சிட்டி விருதுகள் திட்டம்: சென்னை மாநகராட்சி முதலிடம்

Vandhana

சசிகலாவின் சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: ஓ.எஸ்.மணியன்

Niruban Chakkaaravarthi

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று சிறப்பு முகாம்: சென்னையில் ஒத்திவைப்பு

Halley karthi