சுட்டெரிக்கும் கோடை வெயில் : வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக நிழற்பந்தல்!

ஈரோட்டில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக மாவட்ட காவல் துறை சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும்…

ஈரோட்டில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக மாவட்ட காவல் துறை சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  தற்போது அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. மேலும், கத்திரி வெயில் இந்த மாதம் 28ஆம் தேதி வரை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் ஒன்றாக ஈரோடு மாவட்டம் உள்ளது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்லும் வீடியோ போலி! NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!

அதை முன்மாதிரியாக கொண்டு ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் தற்போது பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற பச்சை திரை கொண்ட மேற்கூரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்கள் அனைத்திலும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்னலில் இரண்டு நிமிடம் வரை காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிவதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.